‘பாயும் புலி’ தெலுங்கு இசை விழாவில் ஆர்யா, கார்த்தி

விஷால், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிப்பில் இமான் இசையமைப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பாயும் புலி’.

இப்படம் தெலுங்கில் ‘ஜெயசூர்யா’ என்ற என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு தமிழில் வெளியாகும் அதே தினத்தில் தெலுங்கிலும் வெளியாகிறது.

தற்போது இப்படத்தின் இசை வெளியீடு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. விஷாலுடன் படத்தின் நாயகி காஜல் அகர்வால், ஆர்யா, கார்த்தி, நடிகைகள் குஷ்பு, மதுஷாலினி ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறார்கள்.

‘பாண்டிய நாடு’ வெற்றிக் கூட்டணி மீண்டும் ‘பாயும் புலி’யிலும் சாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Previous

டிரைலர் ‘லைக்’கில் மட்டும் ‘புலி’ சாதனை…

Read Next

Maiem – Maanida song – Happy Birthday Chennai

Most Popular