முதல் நாளில் 14 கோடி வசூலித்த ‘நோட்டா’

தெலுங்குத் திரையுலகத்தின் இளம் ஸ்டாரான விஜய் தேவரகொன்டா தமிழில் அறிமுகமாகியுள்ள ‘நோட்டா’ படம் 5ம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது.

இரண்டு மொழிகளிலும் சேர்த்து இப்படத்திற்கு சிறப்பான ஓபனிங் கிடைத்துள்ளது. முதல் நாள் வசூலாக சுமார் 14 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.

ஆந்திரா, தெலுங்கானாவில் சுமார் 7 கோடி ரூபாயையும், தமிழ்நாட்டில் 2.6 கோடி ரூபாயையும், அமெரிக்காவில் 1.8 கோடியையும், கர்நாடகாவில் 1.55 கோடியையும், மற்ற மாநிலங்களில் 1.2 கோடியையும் வசூலித்துள்ளது.

நேற்றும், இன்றும் விடுமுறை என்பதால் படத்திற்கான முன்பதிவும் நன்றாகவே உள்ளது. முதல் வார இறுதியிலேயே இந்தப் படம் 25 கோடி ரூபாய் வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் தேவரகொன்டாவின் முதல் தமிழ்ப் பட அறிமுகம் அவருக்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

Read Previous

சினிமாவில் சிஸ்டம் சரியில்லை – விஜய் சேதுபதி

Read Next

‘96’, அனுபவித்துப் பார்க்க வேண்டிய படம் – சேரன்