‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்திற்கு ‘A’ சர்டிபிகேட்

ஜி.வி. பிரகாஷ்குமார், ஆனந்தி, மனிஷா யாதவ் நடித்துள்ள ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்திற்கு ‘A’ சர்டிபிகேட் வழங்கப்பட்டுள்ளது.

இதனால் 18 வயதுக்குக் கீழுள்ளவர்கள் இந்தப் படத்தைப் பார்க்க முடியாது. மற்றும் குழந்தைகளுடன், குடும்பத்துடன் வந்து இந்தப் படத்தைப் பார்க்க வாய்ப்பில்லை.அதோடு படத்திற்கு தமிழக அரசின் வரி விலக்கும் கிடைக்காது. ‘யு’ சர்டிபிகேட் படங்களுக்கு மட்டும்தான் அரசு வலி விலக்கு கொடுக்கிறது.

இசையமைப்பாளராக இருந்து ‘டார்லிங்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் ஜி.வி.பிரகாஷ்குமார். அந்தப் படம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து அவரைத் தேடி பல வாய்ப்புகள் வந்தன.

அதில் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படம் தற்போது அனைத்து வேலைகளும் முடிவடைந்து ரிலீசுக்குத் தயாராகி விட்டது.

இந்தப் படத்தின் டீசர் ஏற்கெனவே வெளியான போது ஒரு பக்கம் வரவேற்பு இருந்தாலும், பெண்களை அவமதிக்கும் வகையிலும் இருந்ததாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது.

இப்போது படத்திற்கு ‘ஏ’ சர்டிபிகேட் கிடைத்துள்ளதால் அது படத்தின் வரவேற்பிற்கும் பின்னடைவாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

Read Previous

The title speaks about ‘Pitchaikkaran’

Read Next

OK Kanmani, Orange Mittai for Busan film fest