‘கோப்பெருந்தேவி’ செப்டம்பர் 17ல் ரிலீஸ்…

தமிழ்த் திரையுலகில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் பேய்ப் படங்களின் வரிசையில் தயாராகியிருக்கும் ஒரு புதிய பேய் படம்தான், ‘கோப்பெருந்தேவி.’

சக்தி டாக்கீஸ் ஏ.ராஜசேகர் ரெட்டி தயாரிக்க ஹ்ருஷிகேஷ அச்சுதன் சங்கர் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு எஸ்.எம்.பிரசாந்த் இசையமைத்துள்ளார். கோவை சரளா, வி.டி.வி கணேஷ், சிங்கம் புலி, ஸ்ரீமன், மனோபாலா, சாமிநாதன், வெண்ணிற ஆடை மூர்த்தி, பாண்டு, சாம்ஸ், அனுமோகன், வெங்கல்ராவ், பயில்வான் ரங்கநாதன், அல்வா வாசு உள்ளிட்ட பதினெட்டு நகைச்சுவை நடிகர்கள் இணைந்து நடித்துள்ளார்கள் . இவர்களுடன் ஊர்வசி, தேவதர்ஷினி, டெல்லி கணேஷ், இளவரசு ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

தமிழ் சினிமா வரலாற்றில் பனி பொழியும் லடாக் பகுதியில் செட் போட்டு படமாக்கிய முதல் படம் இதுவே. ஆராத்யா என்ற புதுமுக நடிகை கதாநாயகியாக நடித்துள்ளார்.

அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் புதையலை எடுக்க ஒரு நகைச்சுவைப் பட்டாளம் கிளம்புகிறது. அந்த புதையலை பேய் ஒன்று பாதுகாத்து வருகிறது எனும் விஷயம் தெரியாமல் அவர்கள் அந்த பேயிடம் மாட்டி என்னவெல்லாம் சின்னபின்னமாகிறார்கள் என்பதை நகைச்சுவையுடனும், பயமுறுத்தும் விதத்திலும் கிராபிக்ஸ் காட்சிகளுடன் மிக பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட்டுள்ளது. கிராபிக்ஸ் காட்சிகளுக்கு மட்டும் மிகப் பெரும் தொகை செலவிடப்பட்டுள்ளதாம்.

‘கோப்பெருந்தேவி’ திரைப்படம் செப்டம்பர் 17 ஆம் தேதி வெளியாக உள்ளது.

Read Previous

Paayum Puli – Silukku Marame – Official Video Song

Read Next

The 6th edition of the 80’s Actors Re-union

Most Popular