இந்த மாதம் வெளிவர இருக்கும் படங்களில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் ‘ரஜினி முருகன்’.
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் மூலம் வினியோகஸ்தர்களையும், தியேட்டர்காரர்களையும் வருத்தப்பட வைக்காமல், வசூலை அள்ளிக் கொடுத்த சிவகார்த்திகேயன், பொன்ராம், இமான் கூட்டணி மீண்டும் ‘ரஜினி முருகன்’ படத்தில் இணைந்துள்ளது.
மே மாதம் வெளியான ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா….’ சிங்கிள் டிராக்கும், இரண்டு மாதத்திற்கு வெளிவந்த ‘ரஜினி முருகன்’ டீசரும், ரசிகர்களிடம் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றன.
செப்டம்பர் 17ம் தேதி வெளிவர இருக்கும் ‘ரஜினி முருகன்’ படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அதற்கு முன்னதாக நாளை மறுநாள் 4ம் தேதி ‘ரஜினி முருகன்’ படத்தின் புத்தம் புதிய டிரைலரை வெளியிட உள்ளார்கள்.
டீசரைப் போல டிரைலரும் பட்டையக் கிளப்பப் போவது உறுதி…