[post_gallery]
லிங்குசாமி இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராஜ்கிரண் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘சண்டக்கோழி 2’.
இப்படத்தின் வரலட்சுமியின் கதாபாத்திரம் என்ன என்பது இதுவரை சஸ்பென்சாகவே வைக்கப்பட்டிருந்தது. படம் பற்றி வரலட்சுமி கூறியதாவது,
“சண்டக்கோழி 2’ திரைப்படத்தில் வேலை பார்க்கும் போது நிறைய சந்தோஷமான தருணங்கள் இருந்தது. லிங்குசாமி சார் மிகவும் கூலான மனிதர். ‘சண்டக்கோழி 2’ படத்தில் நான் வழக்கமான நிலையிலிருந்து வெளியே வந்துதான் நடித்துள்ளேன்.
நாங்கள் திண்டுக்கல் , காரைக்குடி போன்ற பகுதிகளில் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தி வந்தோம். அங்கே தொடர்ச்சியாக நிறைய அழகான வீடுகள் இருக்கும். படத்தின் பல முக்கியமான காட்சிகளை அங்கே தான் எடுத்தோம். கிளைமாக்ஸ் காட்சி சிறப்பாக வந்துள்ளது. கண்டிப்பாக ரசிகர்களுக்கு அது விருந்தாக இருக்கும்.
படத்தில் நான் நிறைய சவாலான காட்சிகளில் நடித்துள்ளேன். வெயிலில் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்ததால் எனக்கு முகம் மற்றும் உடல் கருத்தது. இப்படத்தில் ரசிகர்கள் விரும்பும் அனைத்தும் உள்ளது,” என்றார் வரலட்சுமி.
சண்டக்கோழி 2 அக்டோபர் 18 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.