குழந்தை கடத்தலின் உண்மைச் சம்பவம் ‘அவதார வேட்டை’

ஸ்டார் குஞ்சுமோன் தயாரித்து, இயக்க, வி.ஆர். விநாயக், மீரா நாயர், ராதாரவி, பவர் ஸ்டார் சீனிவாசன், ரியாஸ் கான், சோனா, மகாநதி சங்கர் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘அவதார வேட்டை’.

சமூகத்தில் நடந்த, நடந்து கொண்டிருக்கும் தடுக்க முடியாத குற்றங்களில் ஒன்றான குழந்தை கடத்தலைக் கருவாகக் கொண்டு விறுவிறுப்பாக திரைக்கதை எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குனர் ஸ்டார் குஞ்சுமோன். இவர் பல விளம்பரப் படங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர்

படம் பற்றி இயக்குனர் கூறியதாவது,

“அவதார வேட்டை’ கதை கற்பனையில்லை, ஓர் உண்மைச் சம்பவம். இப்பொழுதெல்லாம் குழந்தையை கடத்துவது சாதரணமாகிவிட்டது.

தெருவிலோ, ரோட்டிலோ தனியாக இருக்குற குழைந்தைகளை கடத்துவதைத்தான் பேப்பர்களில் படித்திருக்கிறோம். இந்த உண்மை சம்பவ திருடனுங்க எப்படி குழந்தையை கடத்திருக்காங்கன்னா, ஒரு வீட்டில் எத்தனை குழந்தைகள் இருக்கிறார்கள், வீட்டில் இருப்பது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்பதை தெரிந்து கொள்ள குறியீடு வைத்து குழந்தையைத் திருடுகிறார்கள்.

இப்படி திட்டம் போட்டு குழந்தைகளை திருடும் திருடர்களை எப்படி ஹீரோ கண்டுப்பிடிக்கிறார் என்பதை காதல், ஆக்ஷன், த்ரிலிங் கலந்து ‘அவதார வேட்டை’ படத்தை உருவாக்கியிருக்கிறோம்,” என்கிறார் இயக்குனர் ஸ்டார் குஞ்சுமோன்.

இப்படத்தின் படப்பிடிப்பு உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, ஊட்டி மற்றம் மதுரையில் நடைபெற்றுள்ளது.

Read Previous

‘சர்கார்’ வியாபாரம் 200 கோடி ?

Read Next

வடசென்னை – விமர்சனம்