திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சி.வி. குமார், கே.ஈ. ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கீரின் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கும் புதிய படத்திற் ‘காதலும் கடந்து போகும்’ எனப் பெயரிட்டிருக்கிறார்கள்.
‘சூது கவ்வும்’ வெற்றிப் படத்திற்குப் பிறகு இயக்குனர் நலன் குமாரசாமி, விஜய் சேதுபதி மீண்டும் இணையும் படம் இது.
விஜய்சேதுபதி கதாநாயகனாகவும் மடோனா கதாநாயகியாகவும் நடிக்க சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, லியோஜான் பால் படத்தொகுப்பை மேற்கொள்ள தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
படப்பிடிப்பு ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.