“அழகிய தீயே, மொழி, பயணம், அபியும் நானும்”, என்று குடும்பத்தினர் அனைவரும் பார்த்து ரசிக்கும் வகையில் படம் இயக்கிய ராதா மோகன் அடுத்து இயக்கியுள்ள படம் ‘உப்பு கருவாடு’.
இந்தப் படத்திற்கு அனைவரும் பார்க்கும்படியான ‘யு ‘ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
கருணாகரன், நந்திதா, எம் எஸ் பாஸ்கர், மயில் சாமி ,குமாரவேல், சாம்ஸ், நாராயணன், ரக்க்ஷிதா, சரவணன், பிரபல நடன இயக்குனர் சதீஷ், ‘டாடி எனக்கு ஒரு டவுட்’ செந்தில் ஆகியோர் நடிக்கின்றனர்.
மதன் கார்க்கியின் பாடல்களுக்கு பிரபல கிட்டார் கலைஞர் ஸ்டீவ் வாட்ஸ் இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவு மகேஷ் முத்துசாமி.
‘எல்லா தரப்பினரும் ரசித்து பார்க்க வேண்டிய வகையில் ‘உப்பு கருவாடு’ படத்தை இயக்கி இருக்கிறேன். படத்தின் இசை வெளியீட்டு தினமும், படம் ரிலீஸ் ஆகும் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும்,” என்கிறார்இயக்குனர் ராதா மோகன்.
இப்படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் வெளியிடுகிறது.