இயக்குனர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கும் ‘மாலை நேரத்து மயக்கம்’ படத்தின் ‘ஒரு பாடல்’ வெளியீட்டு விழா சென்னை, லயோலா கல்லூரியில் நடைபெற்று வரும் ஓவேஷன்ஸ் எனப்படும் கல்லூரி கலை விழாவில் நடைபெற்றது.
இவ்விழாவில் படத்தின் இயக்குநர் கீதாஞ்சலி செல்வராகவன் , தயாரிப்பாளர் கோலா பாஸ்கர் , இசையமைப்பாளர் அம்ரித் , படத்தின் நாயகன் பாலகிருஷ்ண கோலா ஆகியோர் கலந்து கொண்டனர்.
படத்தின் இசையமைப்பாளர் அம்ரித் மாலை நேரத்து மயக்கம் படத்தில் இடம் பெற்றுள்ள ‘சரக்க…’ என்று தொடங்கும் பாடலை அனைவரும் கவரும் வண்ணம் பாடினார். விழாவில் இருந்த மாணவர்களும் மாணவிகளும் உற்சாகத்துடன் கைதட்டி ரசித்தனர்.
‘மாலை நேரத்து மயக்கம்’ படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகவுள்ளது.