‘புலி’ – விஜய்யின் முயற்சியைப் பாராட்டிய ரஜினிகாந்த்

விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் மற்றும் பலர் நடித்து அக்டோபர் 1ம் தேதியன்று வெளியான ‘புலி’ திரைப்படம் கடந்த நான்கு நாட்களாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

படத்தை பார்க்க விரும்பிய ரஜினிகாந்திற்கு இந்தப் படம் திரையிட்டு காட்டப்பட்டது. படத்தைப் பார்த்த ரஜினிகாந்த் ‘புலி’ படத்தைப் பற்றிப் பாராட்டியிருக்கிறார்.

“புலி’ படம் பார்த்தேன், எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மிகவும் பாராட்ட வேண்டிய முயற்சி. படத்தில் வரும் பிரம்மாண்ட செட்டுகள் என்னை ரசிக்க வைத்தது. படத்தில் வரும் கிராஃபிக்ஸ் காட்சிகள் என்னை மிகவும் பிரமிக்க வைத்தன. படத்தை இவ்வளவு பிரம்மாண்டமாக தயாரித்த ‘புலி’ படத்தின் தயாரிப்பாளர்களுக்கு வாழ்த்துகள்.

விஜய்யின் நடிப்பு என்ன ஈர்த்தது, விஜய்யின் இந்த முயற்சியை கண்டிப்பாகப் பாராட்டியாக வேண்டும். நடிகை ஸ்ரீதேவியின் நடிப்பு அற்புதமாக இருந்தது. ஹாலிவுட் தரத்திற்கு இணையாக இந்த படம் இருக்கிறது. படம் ஆரம்பம் முதல் இறுதிவரை த்ரில்லிங்காக இருந்தது. குழந்தைகளுக்கான அத்தனை அம்சங்களும் உள்ள படம், குடும்பத்தோடு அனைவரும் பார்க்க வேண்டிய படம் ‘புலி’.

‘Hats Off to the Puli Team’ என்று ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

Read Previous

No beer, biriyani for support – Vishal

Read Next

Pandavar Ani’s manifesto promises aplenty