ஆறறிவும், ஐந்தறிவும் இணையும் ‘சிம்பா’

படத்தின் தலைப்பு எப்படி வித்தியாசமாக இருக்கிறதோ அதே போல இந்த ‘சிம்பா’ படத்தையும் வித்தியாசமாக எடுத்திருக்கிறார் இயக்குனர் அரவிந்த் ஸ்ரீதர்.

மேஜிக் சேர் தயாரிப்பில் பரத், பிரேம்ஜி, பானு மெஹரா, சுவாதி தீக்ஷித், ரமணா, சீனிவாசன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள். விஷால் சந்திரசேகர் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

படத்தில் ஆறறிவும், ஐந்தறிவும் எப்படி இணைந்து இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள் என்பதை இயக்குனர் அரவிந்த் ஸ்ரீதர் தெரிவித்தார்.

“என் நண்பனோட வாழ்க்கையைத்தான் கொஞ்சம் கற்பனை கலந்து ‘சிம்பா’ங்கற பெயர் படமா இயக்கியிருக்கேன்.

தமிழ்ல இதுவரைக்கும் இப்படி ஒரு படம் வந்ததில்லைன்னு தாராளமாச் சொல்லலாம். ஐந்தறிவுக்கும், ஆறறிவுக்கும் இடையே இருக்கிற பாசம்தான் இந்தப் படம்.

ஆறறிவு உள்ள கேரக்டர்ல பரத்தும், ஐந்தறிவு உள்ள கேரக்டர்ல பிரேம்ஜியும் நடிக்கிறாங்க. வீட்டுல ஒரு வளர்ப்புப் பிராணி வளர்க்கறோம்னா அதுக்கும், நமக்கும் இடையில ஒரு மொழி இருக்கும். நாம சொல்றது அதுக்குப் புரியும், அது சொல்றது நமக்குப் புரியும். பிரேம்ஜி பரத்தோட தாத்தாவா இந்தப் படத்துல நடிச்சிருக்காரு.

அப்படி ஒரு மொழிக்கு எந்தப் பெயரும் கிடையாது. அதை முதல் முறையா கொண்டு வந்திருக்கோம்.

பரத் படத்துல கஞ்சாவுக்கு அடிமையா ஆனவரா நடிச்சிருக்காரு. ஆனால், அதை ரொம்பவும் அறுவெறுப்பாலாம் காட்டலை. அப்படி இருக்கிறவங்கள்லாம் கற்பனையான ஒரு உலகத்துல வாழ்ந்திட்டிருப்பாங்க. இந்தப் படம் ‘ஸ்டோனர்’ வகையைச் சார்ந்த ஒரு படம். அதாவது பித்துப் பிடித்தவங்களைப் பத்தின மாதிரியான படம். அவரோட பார்வையில என்ன நடக்குதுங்கறததான் படமா எடுத்திருக்கோம்.

இன்னும் பத்து நாள் படப்பிடிப்பு மட்டுமே எடுக்க வேண்டி உள்ளது. அது முடிந்ததும் இசை வெளியீடு, பட வெளியீடு ஆகியவை இருக்கும்,” என்கிறார் இயக்குனர் அரவிந்த் ஸ்ரீதர்.

 

Read Previous

‘சதுரன்’ என்பவன் யார் ? – இயக்குனர் ராஜீவ் பிரசாத்

Read Next

Binny Mills – Double delight