சிவகார்த்திகேயன் அடுத்து பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிக்க உள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் மீண்டும் நடிக்க உள்ளார்.
ஏற்கெனவே ‘ரஜினி முருகன்’ படத்தில் சிவகார்த்திகேயனுடன் கீர்த்தி சுரேஷ் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் இந்தப் படத்தில் பெண் வேடத்தில் நடிக்கப் போவதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகியுள்ளன.
சிவகார்த்திகேயன் ஜோடிப் பட்டியலில் நயன்தாரா, சமந்தா, எமி ஜாக்சன், ஸ்ருதிஹாசன் என பலரும் பலரைச் சொன்னார்கள். கடைசியில் ‘ரஜினி முருகன்’ ஜோடியான கீர்த்தி சுரேஷையே ஒப்பந்தம் செய்துவிட்டார்கள்.
இதற்கான முறையான அறிவிப்பையும் நேற்று வெளியிட்டார்கள்.
24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பா ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் 2ம் தேதி முதல் ஆரம்பமாக உள்ளது.