பிரச்சனைகள் முடிவு, ‘ரஜினி முருகன்’ 21ம் தேதி ரிலீஸ்

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சூரி, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிப்பில் இமான் இசையமைப்பில் பொன்ராம் இயக்கியுள்ள ‘ரஜினி முருகன்’ படம் இந்த மாதம் 21ம் தேதி சரஸ்வதி பூஜை தினத்தன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மாதம் 17ம் தேதி விநாயகர் சதுர்த்தியன்றே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் தயாரிப்பு நிறுவனத்தின் சிக்கலால் கடைசியில் தள்ளி வைக்கப்பட்டது.

இப்போது அனைத்துப் பிரச்சனைகளும் முடிவடைந்து விட்டதாகவும், ஒரு சில நாட்களில் வெளியீட்டுத் தேதியை முறைப்படி அறிவிக்க உள்ளார்கள் என்றும் கோடம்பாக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

21ம் தேதி வெளியானால் தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறையாக இருப்பது ‘ரஜினி முருகன்’ வெளியீட்டிற்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று வினியோகஸ்தர்களும் தெரிவிக்கிறார்களாம்.

குடும்பத்துடன் கொண்டாட தயாராக இருங்கள் ரசிகர்களே…

Read Previous

Masala Pada’s play boy

Read Next

Peigal Jaakirathai – Official Trailer

Most Popular