சசிகுமார், பாரதிராஜா நடிக்கும் ‘கென்னடி கிளப்’

இயக்குனர் சுசீந்திரன் தற்போது ‘ஜீனியஸ், ஏஞ்சலினா, சாம்பியன்’ ஆகிய படங்களை இயக்கி முடித்துள்ளார். இவற்றில் ‘ஜீனியஸ்’ இந்த வாரம் அக்டோபர் 26ம் தேதி வெளியாக உள்ளது.

அடுத்து சசிகுமார், பாரதிராஜா இருவரும் முதல் முறையாக இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’ என்ற படத்தை சுசீந்திரன் இயக்க உள்ளார். இந்தப் படத்தில் சூரி, முனிஸ்காந்த், மீனாட்சி, காயத்ரி, நீது, சௌமியா, ஸிம்ரிதி, சௌந்தர்யா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

பெண்கள் கபடி விளையாட்டை மையமாக வைத்து இப்படம் உருவாக உள்ளது. இப்படத்திற்காக பாலிவுட்டிலிருந்து வில்லனைத் தேடி வருகிறார் சுசீந்திரன்.

இயக்குனர் சுசீந்திரனின் தந்தை புகழ்பெற்ற கபடிக்குழுவின் நிறுவனர். அவர் 40 வருடமாக அந்த கபடி குழுவை நடத்தி பயிற்சியளித்து வருகிறார். அவரிடம் பயிற்சி பெற்ற பலர் தேசிய மற்றும் உலகளாவிய போட்டிகளில் பங்குபெற்று பதக்கங்கள் வென்றுள்ளனர். இப்படத்தில் நிஜ பெண் கபடி வீராங்கனைகளும் நடிக்க உள்ளார்கள்.

பாண்டியநாடு, பாயும் புலி, மாவீரன் கிட்டு ஆகிய படங்களுக்குப் பிறகு இமான், சுசீந்திரன் மீண்டும் இந்தப் படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளார்கள்.

நல்லுசாமி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தாய் சரவணன் இப்படத்தை தயாரிக்கிறார்.

பழனியை கதைக்களமாக வைத்து உருவாக உள்ள இந்தப் படம் தமிழ்ப் புத்தாண்டு அன்று வெளியாக உள்ளது.

Read Previous

இளையராஜா – யுவன் இணையும் முதல் படம்

Read Next

காற்றின் மொழி – டர்ட்டி பொண்டாட்டி – பாடல் வரிகள் வீடியோ