‘வேதாளம்’ – டீசரின் வேகமான சாதனை

இன்றைய சினிமா ரசிகர்களின் மனதில் முன்னணி இடத்தில் இடம் பிடித்திருப்பவர்களில் அஜித்தும், விஜய்யும் குறிப்பிட வேண்டியவர்கள்.

இவர்களிருவர் நடிக்கும் படங்கள் வந்தால்தான் போட்டி என்று பார்த்தால் அது இப்போது டீசர், டிரைலர் ஆகியவற்றிற்கும் சேர்த்து என்றாகி விட்டது.

இன்று 8ம் தேதி பிறந்த 12 மணி நள்ளிரவில் வெளியான ‘வேதாளம்’ டீசர் இந்த 12 மணி நேரத்திற்குள் மிகப் பெரும் சாதனையை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது.

யு டியுபில் வெளியான இந்த டிரைலர் இதுவரை 6 லட்சத்திற்கும் மேற்பட்ட ஹிட்ஸ்களுடன், 82,000க்கும் மேற்பட்ட லைக்குகளுடன் இந்தியத் திரைப்படங்கள் எதுவும் புரியாத சாதனையை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.

12 மணி நேரத்தில் ஒரு படத்தின் டீசர் இந்த அளவிற்கு லைக்குகளைப் பெற்றிருப்பது இந்தியத் திரையுலகத்தில் இதுவே முதல் முறை.

சல்மான் கான், ஷாரூக் கான், ஆமீர் கான் ஆகியோர் புரியாத சாதனையை அஜித் நிகழ்த்தியிருக்கிறார்.

Read Previous

Sathuran – Official Trailer

Read Next

Maalai Nerathu Mayakkam audio from tomorrow