அருள்நிதி நடிக்கும் ‘ஆறாது சினம்’

“ஈரம், வல்லினம்” படங்களுக்குப் பிறகு அறிவழகன் இயக்க அருள்நிதி நாயகனாக நடிக்கும் படத்திற்கு ‘ஆறாது சினம்’ எனப் பெயரிட்டிருக்கிறார்கள்.

பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ள, தற்போது பல வெற்றிப் படங்களை வினியோகம் செய்து வரும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.

அருள் நிதி நாயகனாக நடிக்க, ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கிறார். இப்படம் பற்றிய அறிவிப்பு சில வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. நேற்று இப்படத்தின் பெயரை அறிவித்தார்கள்.

‘ஆறாது சினம்’ எனப் பெயரிலேயே இது ஒரு ஆக்ஷன் படம் என்பதை மட்டும் அடையாளம் காட்டியுள்ளார்கள்.

விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.

Read Previous

Why do you want to watch Rudhramadevi ? – Promo Video

Read Next

‘கான்’ கைவிடப்படவில்லை – செல்வராகவன் மறுப்பு