‘எங்கேயும் எப்போதும், ராஜா ராணி’ ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், ஏஆர் முருகதாஸ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘10 எண்றதுக்குள்ள’.
விஜய் மில்டன் இயக்கத்தில் டி.இமான் இசையமைப்பில் விக்ரம், சமந்தா மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் பாடல்களும், டீசரும், டிரைலரும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
அக்டோபர் 21ம் தேதி உலகம் முழுவதும் இப்படம் 1000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.
குடும்பத்தினர் அனைவருடன் பார்க்கும்படியாக இப்படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் அடுத்த மாதம் வெளியாகிறது.
விஜய் மில்டனின் ‘கோலி சோடா’, விக்ரமின் ‘ஐ’, சமந்தாவின் ‘கத்தி’ ஆகியோரின் தனித்தனியான வெற்றிப் படங்களுக்குப் பிறகு இந்தக் கூட்டணியின் முதல் படமான ‘10 எண்றதுக்குள்ள’ படத்திற்கு மிகப் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.