டி.என்.எஸ். தேவர் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக T.N.S.செல்லத்துரை தேவர் தயாரிக்க கே.பி.செல்வம் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அபூர்வ மகான்’.
இந்தப் படத்தில் தலைவாசல் விஜய், சாய்பாபா வேடமேற்று நடித்துள்ளார். மற்றும் நாயகனாக சாய்முரளியும், நாயகியாக ரஞ்சனியும் நடித்துள்ளார்கள்.
மனிதனாகப் பிறந்து மகானாக வாழ்ந்த பாபாவின் வாழ்க்கை வரலாறுதான் இந்த படம்.
அக்டோபர் 22ம் தேதியன்று இப்படத்தை வெளியிட உள்ளார்கள். அது பற்றி படத்தின் இயக்குனர் கே.ஆர். மணிமுத்து கூறியதாவது,
“இந்தப் படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து வெளியிட முடிவு செய்த போது படத்தைப் பார்த்த எம்.ஆர்.கிரியேசன்ஸ் A. ஜோதி முருகன் அவர்கள் படத்தை வாங்கி நான் ரிலீஸ் செய்கிறேன். பாபா படத்தை ரிலீஸ் செய்வது எனக்கு கிடைத்த பாக்கியம் என்றார்.
இம்மாதம் 22 ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டோம் . அப்போது நண்பர் ஒருவர் நீங்கள் ரிலீஸ் செய்யும் தேதி தான் பாபா ஜீவ சமாதி அடைந்த நாள் என்று கூறினார். அவர் சொல்லிய பிறகுதான் எங்களுக்கே அந்த விஷயம் தெரிய வந்தது. இவை அனைத்தும் தானாகவே நடந்தது.
பாபா ஜீவ சமாதி அடைந்த நாளில் ‘அபூர்வ மகான்’ படத்தை வெளியிடுவது பாபா மீண்டும் உயிருடன் வருவது போல எங்கள் படக் குழுவினருக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது,” என்றார்.