இணையத்தைச் சுற்றும் ‘கபாலி’ கதை

ஒரு படத்தைப் பற்றிய ஆரம்ப விளம்பரம் வந்தவுடனேயே அந்தப் படத்தின் கதை இதுதான் என சமூக வலைத்தளங்களில் ஆளாளுக்கு எழுது ஆரம்பித்து விடுகிறார்கள்.

அதுவும், ரஜினி படம் என்றால் கேட்கவா வேண்டும். ‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் பரபரப்பாக நடந்து கொண்டு வரும் நிலையில் படத்தின் கதை இதுதான் என ஒரு கதை இணையங்களில் உலவி வருகிறது.

ரஜினிகாந்த் ஒரு மிகப் பெரும் தாதாவாக இருந்தவர். ஆனால், அதையெல்லாம் விட்டுவிட்டு அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். மலேசியாவுக்குச் சென்றிருந்த போது அவருடைய மகள் தன்ஷிகாவை யாரோ கடத்தி விடுகிறார்களாம். மகள் கடத்தப்பட்ட சம்பவம் தெரிந்ததும், மீண்டும் தன் தாதா வாழ்க்கைக்குத் திரும்பி மகளை ரஜினிகாந்த் எப்படி மீட்கிறார் என்பதுதான் படத்தின் கதை என இணையத்தில் சுற்றிச் சுற்றி வருகிறது.

‘பாட்ஷா’ படத்தின் இரண்டாம் பாகம் போல படம் மிகவும் அதிரடியான காட்சிகளுடன் உருவாகி வருகிறதாம். ரஜினிகாந்த் மிகவும் ஈடுபாட்டுடன் படத்தில் நடித்து வருவதாகத் தகவல்.

 

Read Previous

டிரைலர் இல்லாமல் வெளியாகிறது ‘வேதாளம்’

Read Next

‘வேதாளம்’ திரையிடப்படும் உலக நாடுகள்