சீனு ராமசாமி, விஜய் சேதுபதி மீண்டும் இணையும் ‘தர்மதுரை’…

‘நானும் ரௌடிதான்’ படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி தற்போது ‘மெல்லிசை, இடம் பொருள் ஏவல்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.

‘சேதுபதி’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்து ஸ்டுடியோ 9 சுரேஷ் தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் ‘தர்மதுரை’ படத்தில் நடிக்க உள்ளார்.

விஜய் சேதுபதியை ‘தென்மேற்குப் பருவக்காற்று’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகப்படுத்தியவர் சீனு ராமசாமி. மீண்டும் ‘இடம் பொருள் ஏவல்’ படத்தில் இணைந்தார்கள். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இப்போது சீனு ராமசாமி, விஜய் சேதுபதி கூட்டணி மூன்றாவது முறையாக இணைய உள்ளது. யுவன்ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

விரைவில் இப்படம் பற்றிய மற்ற விவரங்களை தயாரிப்பு நிறுவனம் முறைப்படி அறிவிக்க உள்ளது.

Read Previous

Wagah – Official Trailer – 1

Read Next

வசூலில் புதிய சாதனை படைத்த ‘வேதாளம்’