‘நேரம்’ படத்தை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டியன் மற்றும் பலர் நடித்து மலையாளத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான படம் ‘பிரேமம்’.
கேரளத்து இளைஞர்களை ‘மலர் மலர்’ என மயக்க வைத்த கதாபாத்திரத்தில் கோயம்புத்தூரைச் சேர்ந்த சாய் பல்லவி நடித்திருந்தார். ஏறக்குறை தமிழில் வெளிவந்த ‘ஆட்டோகிராப்’ மாதிரியான படம்தான் ‘பிரேமம்’ என்பது பல தமிழ் ரசிகர்களின் கருத்து.
இப்படத்தை தெலுங்கில் ‘மஜ்னு’ என்ற பெயரில் தயாரிக்க உள்ளார்கள். நாகார்ஜுனாவின் மூத்த மகன் நாக சைதன்யா நாயகனாக நடிக்க உள்ளார்.
மலையாளத்தில் சாய் பல்லவி நடித்த ‘மலர்’ கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளார். இப்படத்தில் நடிப்பதற்காக ஸ்ருதிஹாசனுக்கு பெரும் தொகை சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஆரம்பமாக உள்ளது.