‘அத்லெட்’ ஆக அசத்தும் அதர்வா

தமிழ்த் திரையுலகில் ஒரு புதிய முயற்சியாகத் தயாராகியுள்ள ‘ஈட்டி’ திரைப்படம் வரும் 27ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தில் ‘அத்லெட்’ என்று அழைக்கப்படும் தடகள வீரராக, அதிலும் தடை தாண்டும் ஓட்ட வீரர் (Hurdles) கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அதர்வா.

தமிழ்த் திரையுலகில் விளையாட்டையும் மையமாக வைத்து எத்தனையோ திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இருந்தாலும ‘ஈட்டி’ திரைப்படத்தை அவற்றிலிருந்து முற்றிலும் வித்தியாசப்படுத்தி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குனர் ரவி அரசு. இவர் இயக்குனர் வெற்றிமாறனிடம் ‘பொல்லாதவன், ஆடுகளம்’ ஆடுகளம் ஆகிய படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர்.

இந்தப் படத்திற்காக சுமார் மூன்று மாத காலம் தடை தாண்டு ஓட்ட வீரராக கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு அதன் பிறகே படத்தில் நடித்திருக்கிறார் அதர்வா. தினமும் அதிகாலை எழுந்து நிஜ வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர்களிடம் பயிற்சி பெற்று உண்மையான வீரர்கள் எப்படியிருப்பார்களோ அதே போன்ற படத்திலும் தன்னுடைய திறமை அதர்வா வெளிப்படுத்தியிருக்கிறார் என்கிறார் இயக்குனர் ரவி அரசு.

‘ஈட்டி’ படம் தமிழ்த் திரையுலகத்தில் ஒரு குறிப்பிடத்தக்க படமாக அமையும். இந்தப் படத்திற்காக ஒரு பிரம்மாண்டமான கிளைமாக்சை பல லட்ச ரூபாய் செலவில் பெங்களூரில் படமாக்கினோம். அது படத்தின் மிகப் பெரும் ஹைலைட்டாக இருக்கும் என்கிறார் படத்தின் தயாரிப்பாளர் மைக்கோல் ராயப்பன்.

புதிய திரை அனுபவத்தை ‘ஈட்டி’ படம் கொடுக்கும் என்பது நிச்சயம் என்கிறார்கள் படக் குழுவினர்.

Read Previous

Nadigar Sangam team calls on Jayalalithaa

Read Next

‘இஞ்சி இடுப்பழகி’ – சிறப்புத் தோற்றத்தில் சில நட்சத்திரங்கள்

Most Popular