பரத் நடிக்கும் ‘பொட்டு’…

மாபெரும் வெற்றி பெற்ற மைனா, சாட்டை , மொசக்குட்டி போன்ற படங்களைத் தயாரித்த ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் ‘சவுகார் பேட்டை’ படம் இம்மாதம் வெளியாகிறது.

ஸ்ரீகாந்த் – ராய் லட்சுமி நடித்திருக்கும் இப்படத்தின் அனைத்து ஏரியாக்களும் விற்றுவிட்டதாம். படம் சிறப்பாக வந்துள்ளதாலும், வியாபாரம் திருப்திகரமாக நடந்துள்ளதாலும் தயாரிப்பாளர்கள் ஜான்மேக்ஸ் – ஜோன்ஸ் இருவரும் இயக்குனர் வடிவுடையானுக்கு புதிய கார் ஒன்றை பரிசளித்துள்ளனர்.

அத்துடன் அவர் அடுத்து தயாரிக்க உள்ள ‘பொட்டு’ படத்தை இயக்கும் வாய்ப்பையும் ‘சவுகார் பேட்டை’ படத்தின் இயக்குனரான வடிவுடையானுக்கே வழங்கியுள்ளனர்.

பரத் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் கதாநாயகியாக முன்னணி நடிகை ஒருவர் நடிக்க உள்ளார். மற்றும் சரவணன், கருணாஸ், சுமன், சிங்கம்புலி, ஊர்வசி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

‘சவுகார் பேட்டை’ படம் போன்றே இந்தப் படமும் திகில் கலந்த பேய் கதையாக உருவாக உள்ளது. மெடிக்கல் காலேஜ் பின்னணியில் ஒரு பேய்க் கதையையைத்தான் படமாக்க உள்ளோம். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது,” என்கிறார் இயக்குனர் வடிவுடையான்.

Read Previous

Imax comes to Chennai

Read Next

Dushyanth to produce Prabhu’s film