பிடிஎஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா மோத்வானி, அறிமுக நாயகி மானஸா, மனோபாலா, சித்ரா லட்சுமணன், யோகி பாபு மற்றும் பலர் நடித்துவரும் படம் ‘போக்கிரி ராஜா‘.
‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான ராம்பிரகாஷ் ராயப்பா இப்படத்தை இயக்கி வருகிறார், இமான் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக பாண்டிச்சேரியில் கொட்டும் மழையிலும் இடைவிடாது நடைபெற்று வந்தது. அப்போது சுற்றி நின்றிருந்த மக்கள் கூட்டத்தில் ஹன்சிகா சிக்கிக்கொண்டார். அவரை படத்தின் நாயகன் ஜீவாவும், சிபிராஜும் கூட்டநெரிசலில் இருந்து மீட்டு பத்திரமாக கேரவானுக்குள் அனுப்பி வைத்தனர்.
ஜீவா மற்றும் சிபிராஜின் இந்த உதவியால் நெகிழ்ந்த நாயகி ஹன்சிகா இருவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.
மிகப் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் போக்கிரி ராஜா படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியை தொடர்ந்து அடுத்து சென்னையிலும் நடைபெற உள்ளது.