ஆர்வக் கோளாறு அஜித் ரசிகர்கள், தமிழ்ப் படங்களுக்குத் தடை

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் ‘நேர்கொண்ட பார்வை’.

இப்படத்தை பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் உள்ள புகழ் பெற்ற ‘லீ கிரான்ட் ரெக்ஸ்’ தியேட்டரில் திரையிட்டார்கள்.

படத்தில் அஜித்தைப் பார்த்த ஆர்வக் கோளாறு ரசிகர்கள், தியேட்டர் ஸ்கிரீனை சேதப்படுத்தியுள்ளார்கள். அதைத் தொடர்ந்து அந்த தியேட்டர் நிர்வாகம் இனி தமிழ்ப் படங்களைத் திரையிட மாட்டோம் என அறிவித்துவிட்டதாம்.

இதை பிரான்ஸ் நாட்டில் உள்ள தமிழ்ப் படங்களின் வினியோக நிறுவனம் அவர்களது டுவிட்டரில் அறிவித்துள்ளது.

அந்த தியேட்டரில் இதற்கு முன்பு ‘கபாலி, மெர்சல், சர்கார், பேட்ட, விஸ்வாசம்’ உள்ளிட்ட படங்கள் திரையிடப்பட்டுள்ளன.

‘நேர்கொண்ட பார்வை’ படத்தை வெளியிட்ட வினியோகஸ்தரிடம் தியேட்டர் ஸ்கிரீனை மாற்றித் தரச் சொல்லி நிர்வாகம் கேட்டுள்ளதாம். 7000 யூரோ மதிப்பில், அதாவது 5 லட்சம் செலவில் அந்த ஸ்கிரீனை மாற்றித் தர அவர்களும் சம்மதம் சொல்லிவிட்டனராம்.

இனி, அந்த புகழ் பெற்ற தியேட்டரில் தமிழ்ப் படங்கள் திரையிடப்பட மாட்டாது.

https://twitter.com/eoyentertainmen/status/1162011746896416768

Read Previous

விஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ டீசர்

Read Next

கோமாளி – இந்த வாரத்தின் நம்பர் 1 படம்