சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி மற்றும் பலர் நடித்துள்ள ‘ரஜினி முருகன்’ படம் டிசம்பர் 4ம் தேதியன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், பெரும் மழை பெய்த காரணத்தால் படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
தற்போது படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
பொங்கலுக்கு ஏற்கெனவே சில படங்கள் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் அந்தப் போட்டியில் ‘ரஜினி முருகன்’ படமும் கலந்து கொண்டுள்ளது.