தமிழ்த் திரையுலகில் உலகமே வியக்கும் அளவிற்கான படங்களை இயக்கும் ஒரே இயக்குனர் ஷங்கர்.
இவரும் ரஜினிகாந்தும் இணைந்த ‘சிவாஜி, எந்திரன்’ ஆகிய படங்கள் தமிழ்த் திரையுலக வரலாற்றில் வசூல் சாதனை புரிந்த படங்கள்.
இந்தக் கூட்டணி தற்போது மீண்டும் ‘எந்திரன் 2’ படத்தின் மூலமாக இணைகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமாவதாக ஷங்கர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இன்றைய படப்பிடிப்பில் ரஜினிகாந்த், எமி ஜாக்சன் கலந்து கொள்கிறார்கள்.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய எமி ஜாக்சன் கதாநாயகியாக நடிக்கிறார்.
‘கத்தி’ படத்தைத் தயாரித்த லைக்கா புரொடக்சன்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. சுமார் 300 கோடி வரை படத்திற்கு பட்ஜெட் என பேசிக் கொள்கிறார்கள்.
2017 கோடை விடுமுறை கொண்டாட்டமாக இந்தப் படம் வெளியாக வாய்ப்புள்ளது.