2015ம் ஆண்டு கூகுள் வலைதளத்தில் இந்திய மக்கள் எவற்றை அதிகமாகத் தேடினார்கள் என்பது பற்றிய பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ளது.
அந்தப் பட்டியலில் அதிகத் தேடல், டிரென்டிங், தனி நபர், திரைப்படங்கள், பாலிவுட் நடிகர், நடிகை, விளையாட்டு வீரர்கள், மொபைல் போன்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
பாலிவுட் நடிகர்களில் சல்மான் கான் முதலிடத்தையும், நடிகைகளில் சன்னி லியோனும் இடம் பிடித்துள்ளனர்.
மொத்தமான தேடலில் ‘பாகுபலி’ திரைப்படம் டிரென்டிங்கில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. திரைப்படங்களுக்கான தேடலில் இந்தப் படம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
திரைப்படங்களுக்கான தேடலில் ‘ஐ’ திரைப்படம் 5வது இடத்தையும் ‘புலி’ திரைப்படம் 7வது இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்களுக்கான தேடலில் கான்களையும், காத்ரீனா கைப், ஐஸ்வர்யா ராய் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி சன்னி லியோன் முதலிடத்தைப் பிடித்திருப்பது அதிர்ச்சியான ஒரு தகவல்.
சன்னி லியோனை முதலில் தேடும் நம் மக்களைப் பற்றி என்னவென்று சொல்வது….?