பாண்டிராஜ் – விஷால் முதன் முறையாக இணைந்துள்ள படம் ‘கதகளி’.
இயக்குனர் பாண்டிராஜின் பசங்க புரொடக்ஷன்ஸ், விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி இணைந்து தயாரித்துள்ள படம் இது.
விஷால் ஜோடியாக முதன் முறையாக ‘மெட்ராஸ்’ பட நாயகி கேத்தரின் தெரேசா நடித்துள்ளார்.
ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை நாளை வெளியாகிறது.
வரும் பொங்கல் தினத்தன்று ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.