விஜயகாந்த் மகனின் ‘சென்னை ஸ்மாஷர்ஸ் அணி’ அறிமுகம்

தேமுதிக தலைவரும், நடிகர் விஜயகாந்தின் மூத்த மகனான விஜய பிரபாகரன் சென்னை பேட்மிண்டன் அணியை வாங்கியுள்ளார். அந்த அணிக்கு சென்னை ஸ்மாஷர்ஸ் என்று பெயரிட்டுள்ளனர். அந்த அணியின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. அதோடு மஞ்சள் நிறத்திலான சென்னை அணியின் ஜெர்ஸியையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.

அணியில் உள்ள வீரர், வீராங்கனைகளை பத்திரிகையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கும் விஜயபிரபாகரன் பதிலளித்தார்.

“சிறு வயதிலிருந்தே தனக்கு விளையாட்டில் ஆர்வம் இருந்ததாலும், தந்தையின் ஆதரவாலும் இந்த அணியை வாங்கியுள்ளேன். இந்த அணியில் நிறைய இளம் வீரர்களும், குறிப்பாக இந்தியாவுக்காக விளையாடிய பி.வி.சிந்து சென்னை அணிக்காக விளையாடுவது எங்கள் அணிக்கு பலம்.

மேலும் சிக்கி ரெட்டி (Sikki Reddy), ஜெர்ரி சோப்ரா (Jerry Chopra), கிருஷ்ண பிரியா (Krishna Priya) ஆகிய இந்திய வீரர்களும், சோனி (Sony), சைமன் சன்டோசோ (Simon Santoso), பியா (Pia) ஆகிய இந்தோனேஷிய வீரர்களும், மேலும் இங்கிலாந்தைச் சேர்ந்த கிரிஷ் ஆட்காக் (Chris Adcock), பிரான்ஸைச் சேர்ந்த பிரிஸ் (Brice), கனடாவைச் சேர்ந்த டோபி (Toby) ஆகியோரும் உள்ளனர்.

மேலும் கங்குலி பிரசாத் பயிற்சியாளராய் இருப்பது அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. எங்கள் அணியின் அம்பாசஸிடராக வளர்ந்து வரும் இளம் நாயகன் விஜயகாந்தின் இளைய மகன் ஷண்முக பாண்டியன் உள்ளார். தனது சகோதரர் என்பதால் சண்முக பாண்டியனை அம்பாஸிடராக நியமிக்கவில்லை. இயல்பாகவே அம்பாஸிடர்க்கு அதிக உயரம் தேவைப்படுவதால் அணியினர் அவரை தேர்வு செய்துள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகர் என்பதால்தான் சென்னை அணியின் லோகோவில் சிங்க முகத்தை வைத்ததற்கு காரணம். இரண்டு ஆண்டுகள் சென்னை அணி இல்லாததால் அந்த அணியை ஞாபகப்டுத்தும் வகையில் சிங்க லோகோவை வைத்துள்ளோம்.

சென்னை கிரிக்கெட் அணிக்கு விசில் போடு சென்னை கால்பந்து அணிக்கு சுத்தி போடு என்ற முழக்கம் இருப்பது போல சென்னை பாட்மிண்டன் அணிக்கு ஸ்மாஷர்ஸ் போடு என்ற முழக்கத்தை இந்த அணிக்கு வைத்துள்ளோம். சென்னை நேரு விளையாட்டரங்கில் வெள்ள நிவாரணப் பொருட்கள் வைத்துள்ளதால் அங்கு போட்டிகளை நடத்த இயலவில்லை,” என்றும் விஜய பிரபாகரன் கூறினார்.

Read Previous

காதல் காலம் – பாக்யராஜுக்கு மகிழ்ச்சி தந்த தயாரிப்பாளர்

Read Next

Thaarai Thappattai – Official First Look Teaser