சுந்தர் .சி இயக்கத்தில் சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா, பூனம் பஜ்வா மற்றும் பலர் நடித்துள்ள ‘அரண்மனை 2’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது.
2014ம் ஆண்டு வெளிவந்த இப்படத்தின் முதல் பாகம் மிகப் பெரும் வெற்றிப் படமாக அமைந்தது.
முதல் பாகத்தில் நடித்த ஹன்சிகா, கோவை சரளா, மனோபாலா உள்ளிட்டோர் மட்டுமே இப்போது உருவாகியுள்ள இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளனர்.
நாயகனாக சித்தார்த்தும், நாயகிகளாக த்ரிஷா, பூனம் பஜ்வா ஆகியோரும் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளனர்.
‘அரண்மனை 2’ படத்திற்கு வினியோகஸ்தர்கள் மத்தியில் மிகப் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அவ்னி சினிமேக்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வரும் 29ம் தேதி வெளியிடுகிறது.