ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’

2015ம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவந்த ‘டார்லிங்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார்.

சாம் ஆண்டன் இயக்கிய அந்தப் படம் வெற்றிப் படமாக அமைந்து வினியோகஸ்தர்களுக்கு நல்ல லாபத்தையும் கொடுத்தது.

அதே கூட்டணி தற்போது மீண்டும் இணைந்து புதிய படம் ஒன்றை உருவாக்கி வருகிறது. அப்படத்திற்கு ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ என்ற தலைப்பை வைத்து இன்று முதல் பார்வையையும் வெளியிட்டுள்ளார்கள்.

‘பாட்ஷா’ படத்தில் இடம் பெற்ற புகழ் பெற்ற வசனமான ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ என்று படத்தின் தலைப்பு வைப்பதற்காக சமீபத்தில் ரஜினிகாந்தைச் சந்தித்து ஆசியும் வாங்கியுள்ளார் ஜி.வி.பிரகாஷ்குமார்.

 

Read Previous

‘அரண்மனை 2’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்

Read Next

Vedalam – Veera Vinayaka – Song Full Video

Most Popular