கன்னடத்தில் ‘கோச்சடையான்’ உருவாக்கும் புதிய அத்தியாயம்

இந்தியத் திரையுலகில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத ஒரு வரைமுறை கர்நாடகாவில் உண்டு. அங்கு கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக வேறு எந்த மொழிப் படங்களும் கன்னடத்தில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானதில்லை.

திரைப்படங்களுக்கு மட்டும் அல்லாமல் டிவி தொடர்களுக்கும் அப்படி ஒரு தடை அங்கு நீண்ட காலமாகவே இருந்து வந்தது.

‘கோச்சடையான்’ படம் அந்தத் தடையை முறியடித்து அங்கு ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கப் போகிறது.

கன்னட டப்பிங் திரைப்பட சேம்பர் தலைவரான கிருஷ்ண கௌடா என்பவர் ‘கோச்சடையான்’ படத்தை கன்னட மொழியில் டப்பிங் செய்து வெளியிட உள்ளார். டப்பிங் வேலைகளை அவர் ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டாராம்.

விரைவில் ரஜினிகாந்தை அழைத்து படத்தின் இசை வெளியீட்டை நடத்தவும் அவர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அதற்கு சம்மதித்து ரஜினிகாந்த் பெங்களூருக்கு வருவாரா என கன்னடத் திரையுலகமே ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறதாம்.

‘காம்படிஷன் கவுன்சில் ஆப் இந்தியா’, அதாவது இந்திய போட்டிகள் ஆணையத்திடம் புகார் செய்த பின்தான் கர்நாடகாவில் டப்பிங் படங்களை வெளியிட தடை விதிக்கக் கூடாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டதாம்.

இனி, மற்ற மொழிப் படங்கள் கன்னடத்தில் டப்பிங் ஆகி வெளியாக ‘கோச்சடையான்’ புதிய வழி ஒன்றை ஏற்படுத்த உள்ளது.

Read Previous

Irudhi Suttru – Ey Sandakaara – Full Video Song

Read Next

‘இது நம்ம ஆளு’ படத்தை வாங்கிய ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்