பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, சூரி மற்றும் பலர் நடித்துள்ள ‘இது நம்ம ஆளு’ படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.
பல வெற்றிப் படங்களை தொடர்ந்து வினியோகம் செய்து வரும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிட உள்ளது.
பிப்ரவரி மாதக் கடைசியில் அல்லது மார்ச் மாதம் முதல் வாரத்தில் படம் வெளியாகும் எனத் தெரிகிறது.
பாண்டிராஜ் இயக்கிய ‘கதகளி’ படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம்தான் வெளியிட்டுள்ளது.
சுந்தர் .சி இயக்கியுள்ள ‘அரண்மனை 2’ படத்தை அடுத்த வாரம் வெளியிட உள்ளார்கள்.
‘இது நம்ம ஆளு’ படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வாங்கியிருப்பதால் படம் எந்தத் தடங்கலும் இன்றி கண்டிப்பாக வெளிவந்து விடும் என வினியோகஸ்தர்கள் மத்தியிலும் பெரிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாம்.