‘பிரேமம்’ – இயக்குனர் ஷங்கர் பாராட்டு

மலையாளத்தில் கடந்த வருடம் வெளிவந்து இளைஞர்களின் மனதைக் கொள்ளையடித்த படம் ‘பிரேமம்’.

தமிழில் ‘நேரம்’ படத்தை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் இயக்க நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், அனுபமா பரமேஸ்வரன் மற்றும் பலர் நடித்த ‘பிரேமம்’ படம் சென்னையில் 200 நாட்களைக் கடந்து இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது.

பள்ளிப் பருவம், கல்லூரிப் பருவம், வேலை பார்க்கும் பருவம் என ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நிகழ்ந்த மூன்று விதமான காதல்களைப் பற்றிய இந்தப் படத்தைப் பார்த்து பலரும் பாராட்டி வருகிறார்கள்.

அந்த வரிசையில் இந்தியத் திரையுலகின் முக்கிய இயக்குனரான ஷங்கரும் சேர்ந்துவிட்டார்.

“பிரேமம்’ படத்தை இன்றுதான் பார்த்தேன். இயல்பான, யதார்த்தமான என்டர்டெயின்மென்ட். உங்களுடைய டீன்-ஏஜ் பருவத்திற்கே அழகாக அழைத்துக் கொண்டு செல்கிறது. அல்போன்ஸ் புத்திரனுக்கும், அவரது குழுவினருக்கும் வாழ்த்துகள்,” என சற்று முன் இயக்குனர் ஷங்கர் டிவீட் செய்துள்ளார்.

Read Previous

Irudhi Suttru – Trailer 2

Read Next

பிப்ரவரி 5-ல் ‘விசாரணை’