சீதக்காதி படத்தின் நீளம் குறைப்பு

விஜய் சேதுபதியின் 25வது படமாக வெளிவந்துள்ள ‘சீதக்காதி’ படம் கடந்த 20ம் தேதி வெளிவந்தது. படத்தின் மொத்த நீளம் 2 மணி நேரம் 25 நிமிடத்துடன் படம் வெளியானது.

படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாக பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்தனர். அதனால், படத்தின் நீளத்தை சுமார் 15 நிமிடங்களுக்கு மேலாகக் குறைத்துள்ளனர்.

இப்போது நீளம் குறைக்கப்பட்ட, படம்தான் தியேட்டர்களில் திரையிடப்பட்டு வருகிறது. இதன் மூலம் படத்திற்கான வரவேற்பு இன்னும் அதிகரிக்கும் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read Previous

‘விஸ்வாசம்’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்

Read Next

கண்ணே கலைமானே – எந்தன் கண்களை…பாடல் வரிகள் வீடியோ