‘பேட்ட’ ஜனவரி 10 வெளியீடு, டிரைலரில் அறிவிப்பு

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா, மேகா ஆகாஷ் மற்றும் பலர் நடிக்கும் படம் பேட்ட.

இப்படத்தின் டிரைலர் இன்று காலை வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. ஐந்து மணி நேரங்களக்குள் 50 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது.

டிரைலரைப் பார்த்து பல சினிமா பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர். டிரைலரில் ரஜினிகாந்த் மிகவும் இளமையாக இருக்கிறார் என்று ரசிகர்களும் டிரைலரைத் திரும்பத் திரும்பப் பார்த்து வருகிறார்கள்.

பொங்கலுக்கு அஜித், நயன்தாரா நடித்துள்ள ‘விஸ்வாசம்’ படமும் வெளிவர இருப்பதால், ‘பேட்ட’ படம் எந்தத் தேதியில் வெளியாகும் என்ற ஒரு கேள்வி இருந்தது.

இன்று வெளியான டிரைலரில் படம் ஜனவரி 10ம் தேதியே வெளியாகும் என்று அறிவித்துள்ளார்கள்.

Read Previous

பேட்ட – டிரைலர்

Read Next

Petta – Official Trailer [Tamil]