2018 தமிழ் சினிமா – வெற்றியும்…தோல்வியும்…

2018ம் ஆண்டு மொத்தம் 181 படங்கள் வெளிவந்தன. கடந்த சில ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்த நிலையில் இந்த ஆண்டு 200க்கும் குறைவான படங்களே வந்தன. மார்ச், ஏப்ரல் மாதங்களில் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் புதிய படங்களை வெளியிடாததே அதற்குக் காரணம்.

இந்த ஆண்டில், விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்ற படங்கள் என்று பார்த்தால் அவை 10க்கும் குறைவான படங்கள்தான். 18 படங்கள் வசூல் ரீதியாக லாபத்தைக் கொடுத்த படங்களாக இருந்தன. இதில் சில படங்கள் சில ஏரியாக்களில் வசூலையும், சில ஏரியாக்களில் தோல்வியையும் அடைந்துள்ளன.

இருந்தாலும் ‘சர்கார், 2.0’ ஆகிய படங்களின் வசூல் மூலம் இந்த ஆண்டு வசூலான தொகை 1000 கோடியைத் தாண்டியிருக்கும். முதல் முறையாக தமிழ் சினிமா 1000 கோடியைத் தாண்டியது 2018ல்தான் என்ற பெருமை காலத்திற்கும் நிலைத்து நிற்கும்.

முன்னணி நடிகர்கள், நடிகைகளின் தோல்விகள், அறிமுக நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்களின் வெற்றிகள் என இந்த ஆண்டு ஏற்றமும், இறக்கமுமாகவே முடியப் போகிறது.

நாம் விசாரித்த வரையில் இந்த ஆண்டின் சில முக்கியமான படங்களைப் பற்றிய நிலவரம் என்ன என்பது கீழே…

விமர்சன ரீதியாக அதிக வரவேற்பைப் பெற்ற படங்கள்…

மேற்குத் தொடர்ச்சி மலை
ஒரு குப்பைக் கதை
பரியேறும் பெருமாள்
96
வடசென்னை
கனா

வசூல் ரீதியாக வரவேற்பைப் பெற்ற படங்கள்

கலகலப்பு 2
இருட்டு அறையில் முரட்டு குத்து
இரும்புத் திரை
காலா
டிக் டிக் டிக்
தமிழ்ப் படம் 2
கடைக்குட்டி சிங்கம்
பியார் பிரேமா காதல்
கோலமாவு கோகிலா
இமைக்கா நொடிகள்
பரியேறும் பெருமாள்
96
செக்கச் சிவந்த வானம்
ராட்சசன்
சர்கார்
2.0
அடங்க மறு
கனா

வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும், எதிர்பார்க்க வைத்து ஏமாற்றிய படங்கள்

ஸ்கெட்ச்
தானா சேர்ந்த கூட்டம்
குலேபகாவலி
ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்
நாச்சியார்
மெர்க்குரி
தியா
ஜுங்கா
கஜினிகாந்த்
விஸ்வரூபம் 2
லட்சுமி
60 வயது மாநிறம்
சீமராஜா
சாமி 2
நோட்டா
சண்டக்கோழி 2
காற்றின் மொழி
சீதக்காதி
மாரி 2

2018ம் ஆண்டில் வெளிவந்த திரைப்படங்கள்…

ஜனவரி

ஜனவரி 5

காவாலி, டிசம்பர் 13, ஓநாய்கள் ஜாக்கிரதை, பார்க்க தோனுதே, சாவி, விதி மதி உல்டா

ஜனவரி 12

குலேபகாவலி, ஸ்கெட்ச், தானா சேர்ந்த கூட்டம்

ஜனவரி 19

வீரத் தேவன்

ஜனவரி 26

நிமிர், மன்னர் வகையறா, சரணாலயம்

பிப்ரவரி

பிப்ரவரி 2

மதுர வீரன், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், படை வீரன், விசிறி, ஏமாலி

பிப்ரவரி 9

கலகலப்பு 2, நரிவேட்டை, சவரக்கத்தி, சொல்லிவிடவா

பிப்ரவரி 16

மனுசனா நீ, மேல்நாட்டு மருமகன், நாகேஷ் திரையரங்கம், நாச்சியார், வீரா

பிப்ரவரி 23

6 அத்தியாயம், கூட்டாளி, காத்தாடி, கேணி, மெர்லின், ஏன்டா தலையில எண்ண வெக்கல, தமிழனானேன் .க

மார்ச்

மார்ச் 2

தாராவி

ஏப்ரல்

ஏப்ரல் 20

மெர்க்குரி, முந்தல்

ஏப்ரல் 27

தியா, பாடம், பக்கா

மே

மே 4

அலைபேசி, இருட்டு அறையில் முரட்டு குத்து, காத்திருப்போர் பட்டியல்

மே 11

இரவுக்கு ஆயிரம் கண்கள், இரும்புத்திரை

மே 17

பாஸ்கர் ஒரு ராஸ்கல்

மே 18

18-05-2009, காளி, காதலர்கள் வாலிபர் சங்கம், செயல், பால்காரி

மே 25

அபியும் அனுவும், ஒரு குப்பைக் கதை, காலக் கூத்து, பேய் இருக்கா இல்லையா, புதிய ப்ரூஸ்லீ, செம

ஜுன்

ஜுன் 1

ஆண்டனி, மோகனா, பஞ்சுமிட்டாய், வயக்காட்டு மாப்பிள்ளை, எக்ஸ் வீடியோஸ்

ஜுன் 7

காலா

ஜுன் 8

சமூக வலைத்தளம்

ஜுன் 14

கோலி சோடா 2

ஜுன் 15

கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா, கன்னக்கோல், என்னோடு நீ இருந்தால்

ஜுன் 22

ஆந்திரா மெஸ், என்ன தவம் செய்தேனோ, கார்கில், டிராபிக் ராமசாமி, டிக் டிக் டிக்

ஜுன் 29

அசுரவதம், செம போத ஆகாதே, எதுக்குடி காதலிச்ச

ஜுலை

ஜுலை 6

இட்லி, காசு மேல காசு, மிஸ்டர் சந்திரமௌலி, ரோஜா மாளிகை

ஜுலை 12

தமிழ்ப் படம் 2

ஜுலை 13

கடைக்குட்டி சிங்கம்

ஜுலை 20

போத, மாயா பவனம், ஒண்டிக் கட்ட, விண்வெளி பயணக் குறிப்புகள்

ஜுலை 27

பிரம்மபுத்ரா, ஜுங்கா, மோகினி

ஆகஸ்ட்

ஆகஸ்ட் 3

அரளி, எங்க காட்டுல மழை, கஜினிகாந்த், கடல் குதிரைகள், கடிகார மனிதர்கள், காட்டுப்பய சார் இந்த காளி, மணியார் குடும்பம், நாடோடி கனவு, போயா வேலையப் பாத்துக்கிட்டு, உப்பு புளி காரம்

ஆகஸ்ட் 10

3 ரசிகர்கள், அழகு மகன், காதல் எனக்கு ரொம்ப பிடிக்கும், பியார் பிரேமா காதல், விஸ்வரூபம் 2

ஆகஸ்ட் 17

கோலமாவு கோகிலா, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன, ஓடு ராஜா ஓடு, ஓ காதலனே

ஆகஸ்ட் 24

எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம், களரி, லக்ஷ்மி, மேற்குத் தொடர்ச்சி மலை

ஆகஸ்ட் 30

இமைக்கா நொடிகள்

ஆகஸ்ட் 31

60 வயது மாநிறம், ஆருத்ரா, அண்ணனுக்கு ஜே

செப்டம்பர்

செப்டம்பர் 7

அவளுக்கென்ன அழகிய முகம், படித்தவுடன் கிழித்து விடவும், ராஜாவின் பார்வை ராணியின் பக்கம், டார்ச்லைட், தொட்ரா, வஞ்சகர் உலகம்

செப்டம்பர் 13

சீமராஜா, யு டர்ன்

செப்டம்பர் 21

ஏகாந்தம், மேடை, ராஜா ரங்குஸ்கி, சாமி 2

செப்டம்பர் 27

செக்கச் சிவந்த வானம்

செப்டம்பர் 28

பரியேறும் பெருமாள், ஆடவர்

அக்டோபர்

அக்டோபர் 4

96

அக்டோபர் 5

ராட்சசன், யாகன், நோட்டா

அக்டோபர் 12

ஆண் தேவதை, அடங்காப் பசங்க, அமாவாசை, களவாணி சிறுக்கி, கூத்தன், மனுசங்கடா, மூணாவது கண்

அக்டோபர் 17

வடசென்னை

அக்டோபர் 18

சண்டக்கோழி 2, எழுமின்

அக்டோபர் 26

ஜீனியஸ், ஜருகண்டி

நவம்பர்

நவம்பர் 2

ராக தாளங்கள், வன்முறைப் பகுதி, சந்தோஷத்தில் கலவரம்

நவம்பர் 6

பில்லா பாண்டி, களவாணி மாப்பிள்ளை, சர்கார்

நவம்பர் 16

காற்றின் மொழி, திமிரு புடிச்சவன், உத்தரவு மகாராஜா

நவம்பர் 23

கரிமுகன், கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும், பட்டினப்பாக்கம், சகவாசம், செய், செம்மறி ஆடு, வண்டி

நவம்பர் 29

2.0

டிசம்பர்

டிசம்பர் 7

வினை அறியார், தோனி கபடி குழு, சீமத்துரை, இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு

டிசம்பர் 14

பயங்கரமான ஆளு, திரு, துலாம், பிரபா, ஜானி, துப்பாக்கி முனை

டிசம்பர் 20

சீதக்காதி

டிசம்பர் 21

அடங்க மறு, கனா, மாரி 2, சிலுக்குவார்பட்டி சிங்கம்

டிசம்பர் 28

காட்சிப் பிழை, பிரான்மலை

Read Previous

விஸ்வாசம் – டிரைலர்

Read Next

Viswasam – Official Trailer

Most Popular