‘தெரு நாய்’ என்று யாரைச் சொல்கிறார் சித்தார்த் ?

நடிகர் சித்தார்த் நேற்று காலை அவருடைய டிவிட்டரில் பதிவிட்ட ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தின் வசனப் பதிவு தற்போது பெரிய சர்சசையை ஏற்படுத்தியுள்ளது.

“நாகூர் பிரியாணி உளுந்தூர்பேட்டையில இருக்கிற ஒரு தெரு நாய்க்கு கிடைக்கணும்னு எழுதியிருந்தால் அதை யாராலயும் மாத்த முடியாது, தமிழ், தத்துவம்” என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

எதற்காக, யாருக்காக அவர் அப்படி ஒரு பதிவைப் போட்டார் என பலரும் அவரைத் தொடர்ந்து கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், எதற்கும் இதுவரை சித்தார்த் பதிலளிக்கவில்லை.

அவர் இதுவரை அப்படி எந்த ஒரு பதிலையும் தராததால் டிவிட்டரில் தொடர்ந்து பலரும் பல கற்பனைகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தனுஷ் ஹாலிவுட் படத்தில் நடிப்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அவருடைய டிவிட்டரில் பதிவிட்ட கொஞ்ச நேரத்திற்கெல்லாம் சித்தார்த் இப்படி ஒரு பதிவைப் போட்டிருப்பதுதான் சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது.

ஆனாலும், தனுஷ் போட்ட பதிவில் விஜய் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் ‘ஹாலிவுட் நடிகர் என அஜித் அழைக்கப்படுவது குறித்து’  சண்டை போட்டுக் கொள்ள ஆரம்பித்துள்ளார்கள்.

சித்தார்த், அப்படி பதிவிட்டதன் காரணத்தை சீக்கிரம் சொல்லவில்லை என்றால் அது இன்னும் பல சர்ச்சைகளுக்குக் காரணமாக இருக்கும் என்பது மட்டும் உறுதி.

Read Previous

Irudhi Suttru – Review

Read Next

‘Beep’ song – Simbu files plea in HC