‘பேட்ட’ டிக்கெட் விலை 1400 ரூபாய்

தலைப்பைப் பார்த்ததும் ரஜினி ரசிகர்கள் கோபப்பட வேண்டாம். இந்த டிக்கெட் விலை இங்கல்ல, அமெரிக்காவில் அதுவும் படத்தின் பிரிமீயர் காட்சிக்கு.

ஜனவரி 10ம் தேதி வெளியாக உள்ள ‘பேட்ட’ படம் ஒரு நாள் முன்னதாக 9ம் தேதி இரவுக் காட்சியாக அமெரிக்காவில் திரையிடப்பட உள்ளது.

அதற்கான டிக்கெட் விலை 20 டாலர். இந்திய ரூபாய் மதிப்பில் 1400 ரூபாய்.

ஜனவரி 10ம் தேதி முதல், ‘பேட்ட’ தமிழ்ப் படத்திற்கான டிக்கெட் விலை பெரியவர்களுக்கு 18 டாலர் (ரூ.1260 ), சிறியவர்களுக்கு 12 டாலர் (ரூ.840).

தெலுங்கு ‘பேட்ட’ படத்திற்கு பெரியவர்களுக்கு 15 டாலர் (ரூ.1050), சிறியவர்களுக்கு 10 டாலர் (ரூ.700) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

‘பேட்ட’ படம் அமெரிக்காவில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. படத்தை பிக் தின்க் என்ற நிறுவனம் 300 தியேட்டர்களுக்கு மேல் அங்கு வெளியிடுகிறது.

Read Previous

கதையை விட இயக்குனரை நம்பினேன் – ஜெயம் ரவி

Read Next

விஜய் டிவியில் ‘ரெடி ஸ்டெடி போ’ சீசன் 2

Most Popular