தெலுங்கில் ‘கத்தி’ பட ரீமேக்கில் சிரஞ்சீவி ஜோடியாக நடிக்கக் கூப்பிட்டார்கள், ஆனாலும், அதற்கு இன்னும் சம்மதம் சொல்லாமல் தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சேர்ந்துவிட்டார் நயன்தாரா.
விக்னேஷ் சிவன் இயக்க உள்ள புதிய படத்தில்தான் சிவகார்த்திகேயன் – நயன்தாரா ஜோடி சேரப் போகிறார்கள் என்று தகவல்கள் சுற்றிக் கொண்டிருந்தன.
ஆனால், ‘தனி ஒருவன்’ படத்திற்குப் பிறகு மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நாயகானக நடிக்க உள்ள படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டார்.
‘தனி ஒருவன்’ சமயத்தில் மோகன்ராஜாவுக்கும் நயன்தாராவுக்கும் சிறு மோதல் என்று சொல்லப்பட்டது. அதனால், முதலில் இந்தப் படத்தில் நடிக்கக் கேட்ட போது நயன்தாரா மறுத்து விட்டாராம்.
இருந்தாலும், நயன்தாராவே எதிர்பார்க்காத அளவிற்கு சிரஞ்சீவியே கொடுக்கத் தயங்கிய சம்பளத்தைக் கொடுத்து அவரை ஒப்பந்தம் செய்துள்ளதாக கோடம்பாக்கத்தில் தெரிவிக்கிறார்கள்.
நயன்தாராவுக்கு 3 கோடி ரூபாய் சம்பளமாம்…அம்மாடியோவ்….