சமந்தா யாருக்கு ‘கேர்ள் பிரண்ட்’ ?

தமிழில் ‘தெறி, 24’ என அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களின் படங்களில் நடித்து மீண்டும் தன்னுடைய வெற்றியைத் தொடர்கிறார் சமந்தா.

தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் ‘பிரம்மோற்சவம்’ , நிதினுடன் ‘அ..ஆ’ என இரண்டு படங்களில் நடித்து முடித்துவிட்டார். இரண்டும் வெளியீட்டிற்காக காத்துக் கொண்டிருக்கிறது. தற்போது ஜுனியர் என்டிஆருடன் ‘ஜன்தா காரேஜ்’ என்ற படத்தில் மட்டுமே நடித்துக் கொண்டிருக்கிறார்.

தமிழில் தனுஷுடன் ‘வட சென்னை’ என்ற ஒரு படத்தில் மட்டுமே ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இன்னும் கொஞ்ச நாளைக்கு வேறு எந்தப் புதுப் படங்களிலும் நடிக்கப் போவதில்லை என சமந்தா தெரிவித்துள்ளார்.

நேற்று டிவிட்டரில் ‘தொடர்ந்து படப்பிடிப்பில் இருந்ததால் சோர்வாக இருக்கிறேன், இன்னும் கொஞ்ச நாளைக்கு வேறு புதுப் படங்கள் இல்லை. என்னால் நல்ல மகளாகவும் இருக்க முடியவில்லை, நல்ல தோழியாகவும் இருக்க முடியவில்லை, நல்ல ‘கேர்ள் பிரண்ட்’ ஆகவும் இருக்க முடியவில்லை,” என்று கூறியிருந்தார்.

அதனால், அந்த ‘கேர்ள் பிரண்ட்’ என்பதன் அர்த்தம் என்ன என மீடியாக்கள் கேள்வி எழுப்ப ஆரம்பித்துவிட்டன. சமந்தா யாருக்கு தற்போது ‘கேர்ள் பிரண்ட்’ ஆக இருக்கிறார் என்ற புதிய கேள்வியும் எழுந்துள்ளது.

 

Read Previous

திருட்டு விசிடி-யை எதிர்த்து தனியாகப் போராடுவேன் – விஷால்

Read Next

24 – முதல் 3 நாள் வசூல் என்ன ?