‘24’ படம் பலத்த எதிர்பார்ப்புக்கிடையே கடந்த வாரம் வெளியானது.
சூர்யாவுக்கென்று இருக்கும் தனி ரசிகர்கள் கூட்டம் படத்தை முதல் நாளன்றே தியேட்டர்களுக்கு வந்து பார்த்தது.
விடுமுறை நாட்கள் என்பதால் படம் வெளியான வெள்ளி அன்றும், சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் படம் பல தியேட்டர்களில் ‘ஹவுஸ்ஃபுல்’ ஆகவே ஓடியிருக்கிறது.
முதல் வார இறுதி முடிவில் இந்தப் படம் சுமார் 16 கோடி ரூபாய் வரை வசூலித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
வட அமெரிக்கா மற்றும் கனடாவில் இப்படம் மொத்தமாக 11,44,649 டாலர்கள் வசூலித்துள்ளதாக படத்தை வெளியிட்டுள்ள நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன் மூலம் ‘தெறி’ படத்தைத் தொடர்ந்து 1 மில்லியன் டாலர் பட வரிசையில் ‘24’ படமும் இணைந்துள்ளது.