ரசிர்களைக் கவர்ந்த ‘ரெமோ’ முதல் பார்வை

24 ஏஎம் ஸ்டுடியோஸ் ஆர்.டி.ராஜா தயாரிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் ‘ரெமோ’ படத்தின் முதல் பார்வையை இயக்குனர் ஷங்கர் நேற்று நடைபெற்ற பிரம்மாண்டமான விழாவில் வெளியிட்டார்.

சிவகார்த்திகேயன் பெண் வேடத்திலும் நடிக்கும் இப்படத்தின் முதல் பார்வையில் பெண் நர்ஸ் வேடத்தில் சிவகார்த்திகேயன் இருக்கும் புகைப்படத்துடன் கூடிய போஸ்டர் இடம் பெற்றிருந்தது.

இந்த போஸ்டருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வளர்ந்து வரும் நிலையிலேயே சாதாரண ‘கெட்-அப்’ மாற்றம் இல்லாமல் துணிச்சலாக பெண் வேடத்தில் நடிக்க ‘கெட்-அப்’ மாற்றம் செய்துள்ள சிவகார்த்திகேயனை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

நேற்றைய விழாவில் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் லோகோவை ஏவிஎம்.சரவணன் வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் படக் குழுவினர்கள், சிவகார்த்திகேயனை வைத்து அடுத்து படங்களை இயக்க உள்ள இயக்குனர்களான மோகன்ராஜா, பொன்ராம், ரவிக்குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

‘ரெமோ’ படத்திற்கான தீம் பாடலையும் இயக்குனர் ஷங்கர் வெளியிட்டார்.

ஜுலை 1ம் தேதி இப்படத்தின் சிங்கிள் டிராக் வெளியாக உள்ளது.

Read Previous

Amma Kanakku – Review

Read Next

‘ஒன்பதிலிருந்து பத்து வரை’ – இயக்குனரின் சவால்

Most Popular