சபாஷ் நாயுடு – முதல் கட்ட அமெரிக்க படப்பிடிப்பு நிறைவு

கமல்ஹாசன் இயக்கம் நடிப்பில் உருவாகி வரும் ‘சபாஷ் நாயுடு’ படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் 7ம் தேதி அமெரிக்காவில் ஆரம்பமானது.

கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் படத்தின் நாயகியாக நடிக்க, இளைய மகள் அக்ஷரா ஹாசன் உதவி இயக்குனராகப் பணிபுரிகிறார்.

இப்படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். தெலுங்கு நகைச்சுவை நடிகரான பிரம்மானந்தம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கடந்த 20 நாட்களாக இடைவிடாமல் நடந்து வந்த இப்படத்தின் முதுல் கட்டப் படப்பிடிப்பு தற்போது நிறைவு பெற்றுள்ளது.

கமல்ஹாசன் படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்து வருகிறார். அந்தத் தோற்றத்துடன் கமல்ஹாசன் இருக்கும் புகைப்படம் ஒன்றை நடிகர் மாதவன் இன்று வெளியிட்டுள்ளார்.

அடுத்த கட்டப் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது.

Read Previous

‘கபாலி’ – 20 நிமிடம் மட்டுமே ரஜினியின் வயதான தோற்றம்

Read Next

25வது ஆண்டில் ‘அண்ணாமலை’ – குஷ்பு நெகிழ்ச்சி