‘வெண்ணிலா கபடிக் குழு’ படத்தின் மூலம் இயக்குனராக சுசீந்திரனும், நாயகனாக விஷ்ணு விஷாலும் அறிமுகமானார்கள்.
அதன் பிறகு இருவரும் இரண்டாவது முறையாக ‘ஜீவா’ படத்தில் இணைந்தார்கள். இப்போது மூன்றாவது முறையாக மீண்டும் இணைய உள்ளார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் 15ம் தேதி திண்டுக்கல்லில் ஆரம்பமாக உள்ளது.
பார்த்திபன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.
இப்படத்திற்கான பாடல் பதிவு வேலைகள் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.
நல்லுசாமி பிக்சர்ஸ், ஏசியின் சினி கம்பைன்ஸ் சார்பில் தாய் சரவணன், சந்திரசாமி இப்படத்தைத் தயாரிக்கிறார்கள்.