நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் யார் என்பது சாதாரண சினிமா ரசிகருக்குக் கூடத் தெரிந்திருக்கும்.
இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலே ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள் என்று நீண்ட நாட்களாகவே கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. ஆனால், தங்களைப் பற்றி எந்த கிசுகிசு வந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் காதல் ஜோடி இருந்து வருகிறது.
சமீபத்தில் ஹைதராபாத்தில் ஃபிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் ஒன்றாகவே கலந்து கொண்டார்கள்.
நேற்று சிங்கப்பூரில் நடைபெற்ற சைமா விருது வழங்கும் விழாவிலும் இருவரும் ஒன்றாகவே கலந்து கொண்டிருக்கிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் இரண்டு விழாவிலும் விருதுகளை வாங்கிய பின்பு விருதுகளுடன் புகைப்படங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்கள்.
நேற்றிலிருந்தே மீண்டும் நயன்தாரா – விக்னேஷ் சிவன் பற்றி மீடியாக்களில் ஒரு புதிய பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கிறது.
இருவரும் எப்போது திருமணத் தேதியை அறிவிக்கப் போகிறார்கள் என்பதுதான் இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது.