2016ம் ஆண்டு வெளிவந்த படங்களில் அனைவரது வரவேற்பையும் பெற்ற படமாகவும் வசூலிலும் சிறப்பானதொரு படமாகவும் அமைந்த படம் ‘பிச்சைக்காரன்’.
இந்தப் படம் ‘பிச்சகாடு’ என தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி அங்கும் மாபெரும் வெற்றி பெற்றது.
50வது நாளைக் கடந்தும் 234 தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இப்படத்தின் 50வது நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. விழாவில் நடிகை ஜெயசுதா உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்கள்.
நிகழ்ச்சியில் படத்தின் இயக்குனர் சசி, நாயகன் விஜய் ஆண்டனி, நாயகி சாட்னா டைட்டஸ் ஆகியோரும் கலந்து கொண்டு விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.
தெலுங்கில் விழா கொண்டாடியதைப் போல தமிழிலும் விழா கொண்டாடலாமே…