தமிழ் சினிமா, அதிக ‘ஷேர்’ கிடைத்த 10 திரைப்படங்கள்

தமிழ்த் திரைப்படங்கள் தற்போது உலக அளவில் வெளியாகி, பல்வேறு நாடுகளிலும் வசூல் சாதனைகளைப் படைத்து வருகிறது.

‘எப்எம்எஸ்’ எனப்படும் வெளிநாட்டு உரிமை பெரிய ஹீரோக்களின் படங்களைப் பொறுத்தவரையில் அதிக அளவில் விற்கப்படுகின்றன.

இவற்றில் எப்போதுமே ரஜினிகாந்த் தான் முதலிடத்தில் இருப்பார். சமீப காலமாக அவருக்கப் போட்டியாக விஜய் வளர்ந்து வருகிறார். ‘துப்பாக்கி, கத்தி, தெறி’ என விஜய் படங்களும் பலமாக வசூலித்து வருகிறது.

தியேட்டர், வினியோக வட்டாரங்களில் உலக அளவில் அதிக ஷேர்ல கிடைத்த பிடித்துள்ள எவை என்பதை வெளிநாடுகளில் படங்களை வினியோகிக்கும் ஐங்கரன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன் படி முதல் 10 படங்களைப் பிடித்த படங்கள் வருமாறு…

எந்திரன் – 156 கோடி

ஐ – 110

தெறி – 82

லிங்கா – 81

சிவாஜி – 80

கத்தி – 68

துப்பாக்கி – 66

சிங்கம் 2 – 64

விஸ்வரூபம் – 62

ஏழாம் அறிவு – 56

இந்தப் பட்டியலில் 3 ரஜினிகாந்த் படங்களும், 3 விஜய் படங்களும், 2 சூர்யா படங்களும், 1 கமல்ஹாசன் படமும், 1 விக்ரம் படமும் இடம் பெற்றுள்ளன.

ஆனால், ஒரு அஜித் படம் கூட இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல ஷங்கர் இயக்கிய 3 படங்களும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 3 படங்களும் இடம் பெற்றுள்ளன.

‘எந்திரன்’ படத்தின் சாதனையை விரைவில் வெளிவர இருக்கும் ‘கபாலி’ படம் முறியடிக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்பு வியாபார வட்டாரங்களில் எழுந்துள்ளது.

Read Previous

Offers pouring for Manjima Mohan

Read Next

பரபரப்பை ஏற்படுத்திய நயன்தாரா – விக்னேஷ் சிவன்